Thursday, November 20, 2008

தமிழ்த் திரையிசையில் ஸ்வராக்ஷரம்

ஸ்வராக்ஷரம் என்பது கர்நாடக இசையின் ஒரு படிமம். ஸ்வராக்ஷரம் என்ற வார்த்தையினைக் கூர்ந்து கவனித்தால் அது ஸ்வரம், அக்ஷரம் என்ற இரு வார்த்தைகளின் கலவை என்பது புரியும்.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு ஸ்வரங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இந்த ஏழு ஸ்வரங்களே இராகங்களுக்கு ஆதாரமாகும். அக்ஷரம் என்றால், பாடலில் பொதியப்பட்டுள்ள வார்த்தைகளாகும்.

ஸ்வரங்களைக் கொண்டே அக்ஷரங்களைச் செய்தால் அதுவே ஸ்வராக்ஷரமாகும். இது ஒரு விதமான வார்த்தை விளையாட்டாகும்.

திருவாரூர் ராமசாமிப் பிள்ளை என்பார் எழுதிய மோஹன இராகத்தில் அமையப் பெற்ற "ஜகதீஸ்வரி... கிருபை புரி" என்ற பாடலில், "தாருக்குதவி செய்யும் அடுத்தாருக்குதவி செய்யும் தாய் உனைவிட வேருளதா? தாமதமின்றி வேதபுரி தாசனுக்கருந்த என்பதறிதா, பெரிதா, வரம் தா" என்று தைவதத்தை வைத்து ஜாலம் செய்திருப்பார்.

ஜி.என்.பி அவர்களது 'சதாபாலய", பிறகு,கேதாரத்தில் துவங்கி வலசி என்ற நவராகமலிகை வர்ணத்தில், பதஸரோஜ" என்ற இடம், ஹிந்தொள இராகத்தில் அமைந்த "ஸாமகான லோல", ஆனந்த பைரவியில் அமைந்த மற்றோரு "ஸாமகான" ஆகியவை ஸ்வராக்ஷரங்களுக்கு நல்ல உதாராணங்களாகும்.

திரையிசையில் இவ்வாறு ஸ்வரக்ஷரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாவென்று பார்த்தால், ஒரு சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றது.

அகத்தியர் என்ற படத்தில் வரும், "வென்றிடுவேன்... எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்", என்ற பாடலில் வரும் சில ஸ்வராக்ஷரங்கள்:-

மனிதா மத மனிதா - ம நீ தா... ம த... ம நீ தா
பாதக மனிதா - பா த க... பா நீ தா
சாகசமா - ஸ க ஸ மா

ஸ்வரக்ஷரம் அழகாக அமையப் பெற்ற ஓரிரு தமிழ்த் திரைப் பாடல்களில் ஒன்று, "உன்னால் முடியும் தம்பி" படத்தில் இடம் பெற்ற, "என்ன சமையலோ" என்ற பாடலாகும். இதில் ஸ்வராக்ஷரம் என்பது வலிந்து திணிக்கப்படாமல் இயல்பாக இடம் பெற்றிருப்பது ஒர் சிறப்பம்சமாகும்.




ஸ்வராக்ஷரம் என்றால் என்னவென்று இப்போது பிடிபட்டிருக்கும்.

இப்போது இந்த "என்ன சமையலோ" என்ற பாடலில் வரும் ஸ்வராக்ஷரங்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

- சிமுலேஷன்

8 comments:

Simulation said...

"என்ன சமையலோ" பாடலை எழுதியவர் யாரென்று தெரியாததால் குறிப்பிட முடியவில்லை. வாலியா?

- சிமுலேஷன்

jeevagv said...

சிமுலேஷன் சார்,
ஸ்வராக்ஷரத்திற்கு நல்ல அறிமுகம்!
என்ன சமையலோ - சில் என்ன(ன-நி), ச(ஸ)மயலோ, மட்டுமே இல்லையா?

jeevagv said...

பாடலை இயற்றியது - இளையராஜாவே வாம்!
That explains many things, இல்லையா!
இதே பாட்டை இதற்கு முன்னால் மணிப்பூர் மாமியார்(1979) என்ற படத்தில், வரிகள் மட்டும் சற்றே மாறி, இடையூடுகளில், இன்னும் அதிகமான ஆர்கஸ்ராவுடன், இதே பாடகர்களுடன், இவரே கலக்கி இருக்கிறார்.
சுட்டி இங்கே:
http://www.raaga.com/channels/tamil/movie/T0001119.html

Simulation said...

ஜீவா,

வருகைக்கு நன்றி. உங்கள் முதல் பின்னூட்டம் புரியவில்லை. ஸ்வராக்ஷரங்களைக் கண்டுபிடித்துச் சொன்ல்லியுள்ளீர்களா?
அப்படியென்றால் மீண்டும் முயற்சிக்கவும்.

பாடலை எழுதியவர் இளையராஜாவா? அருமை.

அப்புறம் மணிப்பூர் மாமியார் பாடலை இன்னமும் கேட்கவில்லை. ஏதோ தொழில்நுட்பத் தகராறு கேட்கவிடவில்லை.

மணிப்பூர் மாமியாரில்தானே "ஆனந்தத்தேன் காற்று தாலாட்டுதே" என்ற ஹிந்தோள ராகப் பாடலை மலேசியா வாசுதேவன் சி.எஸ்.ஜெயராமன் பாணியில் அழகாகப் பாடியிருப்பார்.

- சிமுலேஷன்

இலவசக்கொத்தனார் said...

சாதமாக தாமதமா

என்ற பிரயோகம் உடனே ஞாபகத்திற்கு வருகிறது.


பபபபபபதா பருப்பு இருக்குதா... இருக்கு
தநிதநிதநிதநிதநிதநி தனியா இருக்கா
இருநீ கொஞ்சம் பொறு நீ....

சரிசரிசரி சரிசரிசரி விளையாட்டுக்கள் போதும்...

கரிகரிகரி கறிகாய்களும் எங்கே..

ராகம் வசந்தா நானும் குடித்துப்பார்க்க ரசம்தா.....

கல் ஆணி... கவனி கல்யாணி...

கமகமகமகமகமகம வாசம் வருதே
மா..ஸா..லா.. கரம் மசாலா


அடேங்கப்பா ஒவ்வொரு வரியையும் சொல்லிடலாம் போல இருக்கே!!

பாடல் ஆசிரியர் ராஜாவா! சபாஷ்!!

Anonymous said...

உடனடியாக நினைவுக்கு வருவது:
"சா-த-மா-க தா-ம-த-மா"

மற்றவை பாடலைத் திரும்பவும் கேட்டால் பிடிபடும்; அலுவலகத்தில் இருப்பதால் தற்சமயம் கேட்பது கொஞ்சம் சிரமம்!

நல்ல பதிவு, உங்கள் வேறு பல பதிவுகளைப் போன்றே!

:)

Anonymous said...

These, in addition to the one I had mentioned in my earlier comment:

சரணம் 1
க ரி க ரி க ரி
க ரி க ரி க ரி
கறிகாய்களும் எங்கே
கறிவேப்பிலை எங்கே
ம ம ம ம ம ம
ம ம ம ம ம ம
ஞ்சள் பொடியும் எங்கே
சாலா பொடி எங்கே
ப ப ப ப ப ப தா
ருப்பு இருக்குதா
த நி த நி த நி
த நி த நி த நி
தனியா இருக்கா? (However, this doesn't quite correspond to the swarams "dha ni" exactly.)
நி ரி நி - கொஞ்சம்
பொறு நீ (Here, again, the "Ru" in "poRu" only approximately suggests the swaram "ri".)

சரணம் 2
ஸ ம க ம க ம
க ம க ம க ம
வாசம் வருதே
ம சா லா
கரம் மசாலா
ஸ ரி ஸ ரி ஸ ரி
ஸ ரி ஸ ரி

விளையாட்டுக்கள் போதும்
க ம தா
மதனி
சாதம் ரெடியா

Vision Unlimited said...

தாமதமா
என்பது விடை