Thursday, August 31, 2006

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை, கீரவாணியில் அமைந்ததாகும்.

ஜனரஞ்சகமான கீரவாணி இராகத்தினை, எந்த ஒரு சூழ்நிலைக்கும் அழகாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, சின்னத் தம்பியின், 'போவோமா ஊர்கோலம்', ஒரு மகிழ்ச்சியான பாடலாகும். ஆனால், இதே இராகத்தினை, அபூர்வ சகோதரர்கள் படத்தில், 'ஒன்னை நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்' என்ற பாடலில் சோகம் ததும்பும் விதத்தில் வடித்திருப்பார்கள். கேளடி கண்மணியில், எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்திய. 'மண்ணில் இந்தக் காதல் அன்றியும்' கீரவாணிதான். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கீரவாணியை உடனே இனம் கண்டு கொள்ள ஒரு பாடல் வேண்டுமென்று யாராவது கேட்டால் இருக்கவே இருக்கிறது, பொன்னு மணியின், 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு'. பாடல் படமாக்கப்பட்ட விதமும், பாடலின் மெலடியும், கீரவாணியைத் தூக்கி நிறுத்துகின்றன.

இராகம்: கீரவாணி
21ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ
அவரோகணம்: ஸ நி3 த1ப ம1 க2 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்

01. ஆடாத மனமும் - மகாதேவி
02. ஆகாயத் தாமரை - நாடோடிப் பாட்டுக்காரன்
03. ஆலமரம் வேலமரம் - செந்தூரம்
04. ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது - பொன் மேகலை
05. அந்த வானத்தப் போல - சின்னக் கவுண்டர்
06. அரிதாரத்தப் பூசிக்கொள்ள - அவதாரம்
07. ஆயிரம் கோடி சூரியன் போலே - கரிசக்காட்டுப் பூவே
08. பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
09. சந்தா ஓ சந்தா - கண்ணெதிரே தோன்றினாள்
10. சின்ன மணிக் குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
11. தெய்வம் தந்த வீடு - அவள் ஓரு தொடர்கதை
12. எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13. எங்கே சென்று தேடுவேன் - ஞான சௌந்தரி
14. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - க்ஷத்ரியன்
15. என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
16. என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
17. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
18. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
19. கூட்ஸ் வண்டியிலே - குங்குமச் சிமிழ்
20. ஹைவேஸ்ஸிலே ஸ்பீட் பிரேக்கில்லே - மனசெல்லாம்
21. இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்
22. இதயமே இதயமே என்னை மறந்தது - ஜூலி கணபதி
23. இளவேனில் இது வைகாசி மாசம் - காதல் ரோஜாவே
24. இன்னிசை - துள்ளாத மனமும் துள்ளும்
25. கத போலத் தோணும் இது கதையும் அல்ல - வீரத் தாலாட்டு
26. கண்ணே இன்று கல்யாண - ஆணழகன்
27. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
28. கீரவாணி கீரவாணி - பாடும் பறவைகள்
29. குங்குமக் கோலம் - அண்ணன் ஒரு கோயில்
30. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் - காதல் ஓவியம்
31. குயிலுக்கு கூ கூ கூவிட - ·ப்ரண்ட்ஸ்
32. மால கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
33. மலரே தென்றல் பாடும் ஞானம் - வீட்டுல் விசேஷங்க
34. மலர்களிலே ஆராதனை - கரும்பு வில்
35. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
36. மாமனோட மனசு - உத்தம ராசா
37. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
38. மனிதா மனிதா இனி உன் விழிகள் - கண் சிவந்தால் மண் சிவக்கும்
39. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே
40. மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்
41. மண்ணில் இந்தக் காதல் - கேளடி கண்மணி
42. முன் பனியா - நந்தா
43. முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா
44. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
45. நான் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி
46. நான் தேடிய - எங்கே எனது கவிதை
47. நீ எங்கே என் அன்பே - சின்னத் தம்பி
48. நீதானே நீதானே - தாலாட்டுப் பாடவா
49. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
50. நேரமிதே நேசன் குணவிலாசன் - ராஜகுமாரி
51. நிலா அது வானத்து மேலே - நாயகன்
52. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
53. நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோக்ரா·ப்
54. ஓ ஊர்வலம் - மாநகரக் காவல்
55. ஒ பாப்பா லாலி - இதயத்தைத் திருடாதே
56. ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்கா முடி
57. ஒன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
58. ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
59. ஒரிடந்தனிலே நிலை இலா உலகினிலே - வேலைக்காரி
60. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
61. ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
62. ஒரு முத்துக்கிளி - தாயம்மா
63. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது - தொடரும்
64. பாடிப் பறந்த கிளி - கிழக்கு வாசல்
65. பாடும் வானம்பாடி - நான் பாடும் பாடல்
66. பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா - தேன் நிலவு
67. பெண்ணொருத்தி - ஜெமினி
68. பூ முடியும் - வெள்ளிக் கிழமை விரதம்
69. பூங்காற்றே இனி போதும் - படிச்ச புள்ள
70. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
71. பூங்கொடிதான் பூத்தாடாதாம்மா - இதயம்
72. பூப்பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
73. போவோமா ஊர்கோலம் - சின்னத் தம்பி
74. ராஜராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
75. ராசாத்தி மனசிலே - ராசாவே உன்னை நம்பி
76. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் - என் மன வானில்
77. சலாம் குலாமு - ஹலோ
78. சிறு சிறு சிறகுகளில் - கொஞ்சிப் பேசலாம்
79. சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் - நிலவே முகம் காட்டு
80. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
81. சுத்தாதே பூமித்தாயே நில் - நிலவே முகம் காட்டு
82. தளுக்கி தளுக்கி - கிழக்கு வாசல்
83. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
84. துளியோ துளி முத்துத் துளி - காதலிக்க நேரமில்லை
85. உன் குத்தமா என் குத்தமா - அழகி
86. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
87. உன்னை நான் அறிவேன் - குணா
88. உன்னை நினைக்கவே - ஜே ஜே89. உரு மாறி வந்து - விஜயகுமாரி
90. வானம் அதிரவே - ரமணா
91. வானத்திலிருந்த்து குதிச்சி வந்தேனா - பூந்தோட்டம்
92. வெண்ணிலவுக்கு வானத்த - தாலாட்டு பாடவா
93. வெற்றிக் கொடி கட்டு - படையப்பா
94. எவனோ ஒருவன் - அலை பாயுதே

கீரவாணி இராகம் ரொம்பப் பிடித்துப் போயிற்றோ என்னமோ தெரியவில்லை. மரகதமணி என்ற இசையமப்பாளர், கீரவாணி என்ற பெயரிலும் வலம் வந்தார். அழகன் படத்தின் அழகான பாடல்களைக் கொடுத்தவர் இவரே. அம்சலேகா என்பவரும் இவரா என்று தெரியவில்லை.

ஜீவா வெங்கட்ராமன் என்பவரும் இந்த இராகத்தைப் பற்றி வலையில் பதிந்துள்ளார். http://jeevagv.blogspot.com/2005/05/blog-post.html

கிரணாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த இராகத்தைச் சிலர் ஸ்டலாக, கிர்வானி என்றும் அழைப்பதுண்டு.

By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

- சிமுலேஷன்.

8 comments:

இலவசக்கொத்தனார் said...

கீரவாணி மிகவும் அழகான இராகம். குறிப்பிட்டுள்ள பாட்டுக்களைக் கேட்டாலே தெரிய வரும். இந்தப் பட்டியலில் பல பாடல்களை நான் கேட்டதில்லை. கேட்க முயல்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

//By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?//

சிமுலேஷன் முதற்கண் அது dumb charades. நீங்கள் குறிப்பிட்டது போல் இல்லை. கீரவாணியை கீற /வா/ நீ எனப் பிரித்து நகங்க்களால் கீறுவது போலவும், வாவென அழைத்தும், நீ என சைகை செய்தும் கீரவாணியைக் காட்ட வேண்டியதுதான். :)

SP.VR.சுப்பையா said...

என்னிடம் அரசு இல்லை
இருந்தால் உங்களுக்கு 'இசைச் சேவை மாமணி' என்ற பட்டத்தைக் கொடுத்து விடுவேன்
SP.VR.SUBBIAH

Simulation said...

இ.கொத்ஸ்,

DC திருத்தத்திற்கு நன்றி.

சுப்பையா அவர்களே,

எதோ கேள்வி ஞானத்தை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கின்றேன்.

"உனக்கே இதெல்லாம் கொஞ்சம் ஒவராத் தெரியவில்லையா" என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வர ஆசைப்படுகின்றீர்களா?

-சிமுலேஷன்

செந்தழல் ரவி said...

எனக்கு ஒரு சந்தேகம்..

ஒரே ராகம் என்று சொல்கிறீர்கள்..ஆனால் பாடலை கேட்கும்போது வேறுமாதிரி இருக்கிறதே..

படையப்பா - வெற்றிக்கொடிகட்டுவும்,
பொன்னுமணி - நெஞ்சுக்குள்ளே இன்னாருவும் எப்படி ஒன்றாகும் ?

SP.VR.சுப்பையா said...

Swami
Please take it in the right sense!
It is expressed to show my whole hearted appreciation

Simulation said...

ரவி,

இராகம் வேறு. ட்யூன் என்வது வேறு. ஒரே இராகத்தில் இருந்தாலும், ட்யூன் வேறாக இருக்கும்போது வித்தியாசம் பெரிதாகத் தெரியும். அடுத்தபடியாக, நான் முன்னமே சொன்னபடி, திரையிசை இயக்குநர்கள் தங்களுக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி, அவ்வப்போது சில அன்னிய ஸ்வரங்களயும் கலப்பதுண்டு. எனவேகூட அதிக வித்தியாசங்கள் தெரியலாம்.

சுப்பையா அவர்களே,

தங்களின் பாராட்டு நெஞ்சார்ந்த பாராட்டு என்பது அறிந்ததே. மிக்க நன்றி. ஆனால் பட்டங்கள் என்றெல்லாம் சொன்னபோது, கொஞ்சம் ஓவர் என்று எண்ணினேன். தவறாக எண்ண வேண்டாம்.

- சிமுலேஷன்

Anonymous said...

கீரவாணிப்பதிவை இப்போதுதான் பார்த்தேன். என்னுடைய பதிவையும் சேர்த்துக்கொண்டமைக்கு நன்றிகள்.
உங்கள் பதிவை கூகிள் ரீடரில் சேர்த்துக்கோண்டு விட்டேன். இனிமேல் உடனுக்குடன் படித்து விடுவேன்!

அப்படியே இன்னொரு திரைஇசை ராகங்களை தொகுக்கும் இன்னொரு பதிவர் இங்கே.