Saturday, January 22, 2011

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 08 - சுத்த தன்யாசி

மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் கொடுக்கும் ராகங்களில் ஒன்று "சுத்த தன்யாசி". இது மேளகர்த்தா ராகமான நடபைரவியின் ஜன்யமாகும். இந்த ராகம் :உதய ரவிச்சந்திரிகா" என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.

இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்: ஸ க2 ம1 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ நி2 ப ம1 க2 ஸ

முதலாவது "பலே பாண்டியா" படத்தில் இடம் பெறும் "நீயே உனக்கு என்றும் நிகரானவன்" என்ற பாடல். சிவாஜி கணேசனும், எம்.ஆர்.ராதாவும் பாடுவது போல அமைக்கப்பட்ட பாடல். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. சிவாஜி, மற்றும் எம்.ஆர்.ராதா இருவரின் ஏட்ட்க்குப் போட்டிகும், அங்க சேஷ்டைக்களுக்காகவும் புகழ்பெற்றது.



அடுத்ததாக எம்ஜிஆர், சரோஜாதேவி இருவரும் நடித்த படகோட்டி படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற "தொட்டால் பூ மலரும்" என்ற சுத்தமான சுத்த தன்யாசிப் பாடல்.



எண்பதுகளில் இளையராஜாவின் ராஜாங்கம் துவன்கிய பின், அவர் சில ராகங்களில் எக்கச்சக்கப் பாடல்களில் இசையமைத்தார். உதாரணமாக ஹம்சத்வனி, கல்யாணி போன்றவை. இதே வரிசையில் வந்ததுதான் சுத்த தன்யாசியும். அவருக்குப் பிடித்த ராகம் என்றால் அவரே பாடவும் செய்து விடுவார். உதாராணம் அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெரும் "விழியில் விழுந்து இதயம் கலந்து"



அடுத்தபடியாக நாம் கேட்க இருப்பது 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வந்த 'பூவரசம் பூ பூத்தாச்சு" என்ற பாடல். பின்னணியில் இடல் பெறும் கூட்ஸ் வண்டியின் இசை ரசிக்கும்படியாக இருக்கும்.



மீண்டும் அதே படத்தில் இடம் பெறும் 'மாஞ்சோலைக் கிளிதானோ' என்ற பாடல் மூலம் இளையராஜா என்பதுகளில் சுத்த தன்யாசியின் மேலே எவ்வளவு காதலாக இருந்திருக்கின்றார் என்று தெரிந்து கொள்ளலாம்.



இப்போது கேட்க இருப்பது 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் இடம் பெறும் 'ஆயிரம் மலர்களே, மலருங்க: என்ற பாடல்.



அடுத்து, கல்லுக்குள் ஈரம்' படத்தில் இடம் பெறும் 'சிறு பொன்மணி அசையும்' என்ற பாடல்.



அடுத்து சோர்ந்து கிடப்பவர்களை தட்டியெழுப்பும் வண்ணம் அமைந்த "புஞ்சை உண்டு நஞ்சை உண்டு' என்ற 'உன்னால் முடியும் தம்பி' படப் பாடல்.



தமிழ்த் திரையிசையில் சுத்த தன்யாசியின் பட்டியல் மிகப் பெரியது. குறிப்பாக ராஜாவின் பங்கால். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். நேரம் கிடைக்குபோது இந்தப் பதிவில் மற்றைய சுத்த தன்யாசிப் பாடல்களை தரவேற்றுவேன்.

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 07 - தர்மவதி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 06 - சாருகேசி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

 - சிமுலேஷன்

5 comments:

BalHanuman said...

அன்புள்ள சிமுலேஷன்,

P.சுசீலா பாடிய இந்த அருமையான பாடலை விட்டு விட்டீர்களே....

கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே (கர்ணன்)

Simulation said...

பால்ஹனுமன், ஆமாம் இது ஒரு அருமையான பாடல். பதிவில் கூறியபடி பல பாடல்கள விடுபட்டுவிட்டன. இந்தப் பாடலுக்கான காணொளிச் சுட்டியைக் கொடுத்துதவினால் இணைக்கின்றேன். - சிமுலேஷன்

Jawahar said...

அண்ணா, சூப்பர்!!!

என்னோட ஃபேவரைட் ராகங்கள்ள ஒண்ணு சுத்த தன்யாசி. அதுல எனக்குப் பிடிச்ச எல்லாப் பாட்டையும் கவர் பண்ணிட்டீங்க.

இன்னும் நிறைய இருகு. எல்லாத்தையும் கவர் பண்ண ஒரு இடுகை போறாது.

தில்லு முல்லு படத்தில வர்ர ராகங்கள் பதினாறு கூட சுத்த தன்யாசிதானாம், அதைக் கண்டுபிடிக்கவே முடியாம ஆனா ரசிக்கிற மாதிரி போட்டிருக்கிற அண்ணன் எம்.எஸ்.வி. பற்றி என்ன நினைக்கிறீங்க?

http://kgjawarlal.wordpress.com

சாணக்கியன் said...

IR-இன் எனக்குப் பிடித்த பாடல்களில் இத்தனை சுத்ததன்யாசியா? ஆச்சர்யம்...

’நஞ்சை உண்டு’- ராகமாலிகா என படித்ததாக நினைவு... அந்தப்படத்தில் கமலே சொல்லும் ஒரு வசனமும் அப்படி வருமோ? நினைவில்லை!

Simulation said...

சுத்த தன்யாசியை, சுத்த சந்நியாசி என்று பாவம் ஒருவர் நினைத்து சங்கீதம் தெரிந்த மாமியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

- சிமுலேஷன்

http://vidhyascribbles.blogspot.com/2011/01/blog-post_19.html

//அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது.//